பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காற்றில் பாய்ந்து செல்லுவேன் கடலும் மலையும் தாண்டுவேன் ஆற்று வெள்ளம் தன்னையே அணைகள் கட்டித் தேக்குவேன் பாட்டும் கலையும் பயிலுவேன் பசியும் பிணியும் போக்குவேன் நாட்டின் செல்வம் ஓங்கவே நல்ல பணிகள் ஆற்றுவேன் வீரம் அன்பு சத்தியம் வெல்க என்று போற்றுவேன் பாரில் இவைகள் எங்குமே பரவ என்றும் நாடுவேன் உலகம் ஒன்று கூடியோர் உயர்ந்த குடும்பம் ஆகவும் நலங்கள் பெற்று வாழவும் நானும் உழைப்பேன் என்றுமே. 51