பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லநாடகங்கள் - --- - 9 (அமைச்சரும் சேனாதிபதியும் தலை குனிந்தபடி நின்று கொண்டிருக்க, மகாராஜா - சோகமும் கோபமும் கலந்த குரலில் பேசுகிறார்) - சுத்தோ: நான் நினைப்பது போல் தான் எதுவும் நடக்க வில்லை. என் ஆசையை நிறைவேற்ற இங்கு யாருக்குமே திறனில்லை. துணிவில்லை. நான் பெற்ற மகனை, என் ஆருயிர் மைந்தனை, அரண்மனைக்கு அழைத்து வாருங்கள் என்று ஆயிரம் பேரை அனுப்பினேன். ஆசையோடு வாயிலிலே காத்திருந்தேன். தூது போன அத்தனை பேரும் துறவுபூண்டு அங்கேயே தங்கி விட்டார்கள். . . - ஆவலோடு என் அமைச்சரை அனுப்பினேன். - அவர் கதியும் அதே கதிதான். போனவர் திரும்ப வில்லை. வரவும் விரும்பவில்லை. என்மெய்காப்பாளன்!. அவனையும் உண்மையாக - i. - - - - - * . - - - - - o - - - * - - . நம்பி அனுப்பினேன். அவர்களை எல்லாம் நல்லவர்களாக்கிவிட்டான்-அந்த முட்டாள். இனி யாரை நம்புவேன்? எப்படி என் மகனை பார்ப்பேன். என் ஆசைகளைத் தீர்ப்பேன்! சேனாதி அரசே துறவறம் பூண்டவர்களை நம்முடைய விருப்பத்திற்குக் கட்டுப் படுத்த முடியாது. எங்கள் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை - - மந்திரி: என்று வருத்தத்துடன். " . . . . . . . " அரசே தைரியத்தை இழக்க வேண்டாம். புத்தர் வருவார். நிச்சயம் நம் அரண்மனைக்கு வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/10&oldid=775388" இலிருந்து மீள்விக்கப்பட்டது