பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 99 வேதனைக்கு ஆளாகி, Fಿ போனவர்களுக்கு, நாடு கேட்க வந்தேன். துரியோ: பிறகு. # * கண்ணன்:சொன்ன சொல்லைக் காப்பாற்றிய மன்னன் என்று பாரெல்லாம் உன்னைப் பாராட்ட, உன் பெருந்தன்மை எல்லோருக்கும் வழிகாட்ட, நீ வாழ வேண்டும் என்று சொல்லவந்தேன். சகுனி சொல்ல வந்தாயா...இல்லை...பொய் பேசி வெல்ல வந்தாயா? தோற்றோடிப் போனவர்கள் தூதுவிட்டு அரசனை ஏமாற்றப் பார்க்கிறார்களா?... கண்ணன்:தூதுக்கு அப்படியா அர்த்தம்... துரியோ: எப்படிஇருந்தால் என்ன? எல்லா நாடும் எனக்குச் சொந்தமானது. இதில் அவர்களுக்கு பங்கேது, பாகமேது? - கண்ணன்: அது, அவர்களின் உரிமை. துரியோ அப்படிக் கேட்பது மடமை... கண்ணன்.அது அவர்களின் சொத்து... துரியோ அது, இன்று என்னுடைய பற்று. இதைக் கேட்கும் தூதுவரே! நீர் வெறுத்தாலும் சரி, இந்தச் சபையே, திகைத்தாலும் சரி, ஏழுலகும் என்னைப் பகைத்தாலும் சரி, ஒரு ஈ உட்காரும் அளவுக்குக் கூட அவர்களுக்கு இல்லை...