பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 1 O1 துரியோ: உம் யூகம் அப்படிக் கூறுகிறதோ...அரிய கண்டு பிடிப்பு...துதுவரே...கேளும்.உம் யூகம் சரிதான். கண்ணன்:போர் வேண்டுமென்றால், கையிலடித்துக் கூறி துரியோ: விடு. (பொங்கியெழுந்து) என்ன அகந்தை உனக்கு? ஆயர் குடியிலே வளர்ந்த தோஷமா? கையடித்துச் சொல்லவேண்டுமா? என் சபையிலே, என் முன்னாலே, என்னையே பொய்யனாக்கத் துணிந்த பேதையே! போரென்றால் பயந்தோடிப் பதுங்கும் பேடியல்ல நான் புலிக்குப் பிறந்தவன்.--தெரிகிறதா? கோழைகளுக்கு வீரம் இப்பொழுதுதான் கொப்புளித்துகத் கொண்டு வருகிறதாம்! அதற்குப் பல தூதுவராம். போ... ஆண்மையிருந்தால், போர்க் களத்திலே சந்திக்கச் சொல்! இதுதான் என் உறுதியான, இறுதியான முடிவென்று சொல்...போர். போர். (கர்ஜிக்கிறான்) -திரை