பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கண்ணன்: அருச்சு: காட்சி 4 இடம்: போர்க்களக் காட்சி. உள்ளே கண்ணன், அருச்சுனன். (தேரை விட்டு இறங்கி வந்த அருச்சுனன் திகைப்புடன்நிற்கிறான். எதிரே இருக்கின்ற காட்சியைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறான். கண்ணன் அவனைக் கவனித்துவிட்டு, பேச ஆரம்பிக்கிறான்.) அர்ஜூனா! அதோ பார்! ஆயிரம் ஆயிரம் படைகள் அணிவகுத்து நிற்கும் காட்சியைப் பார். அநீதியை அழித்து, நீதியை வாழவைக்க வந்து நிற்கும் வீரர்களைப் பார். விவேகிகளைப் பார். அவர்கள் எல்லாம் தருமத்தைக் காக்கவந்த தயாநிதிகள். எதிரிலே பார்!... ஆணவத்தால் அறிவிழந்து, அகந்தை தலைக்கேறிய தற்பெருமை பிடித்த வர்கள்... பாசத்தால் அவர்களுக்குத் துணை போகின்ற பண்பாளர்கள். அவர்களை நாம் இன்று வென்றாக வேண்டும். அறத்தினை கொண்டாட வேண்டும். என்ன அர்ஜூனா! நான் சொல்லிக் கொண்டே போகிறேன். உன் முகத்திலே சோகம் படரக் காரணம்? இருக்கிறது...எதிரிலே நிற்பவர்கள் அத்தனை பேரும் பகைவர்கள் அல்லவே. அவர்கள் எல்லாம் எனக்குச் சொந்தக்காரர்கள்!