பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 1 O3 கண்ணன்: அருச்சு: கண்ணன்: அருச்சு: கண்ணன்: அருச்சு: கண்ணன்: அருச்சு: கண்ணன்: உனக்கல்ல...அதர்மத்திற்கும் அக்ரமத்திற்கும் சொந்தக்காரர்கள். மனிதப் பண்பாட்டின் விரோதிகள். மனித குலத்தின் பகைவர்கள். ஆயிரமே இருந்தாலும், உறவை அழிப்பது தருமமா? அப்படிக் கேள், எது தருமம்? எது.அதர்மம்? எது நீதி எது அநீதி! இன்று இது புரிந்து விட்டால், உன் குழப்பம் போகும்; சோகம் பறக்கும்; விவேகம் பிறக்கும்; வீரம் ஆர்ப்பரிக்கும். கண்ணா! அதோ நிற்கிறாரே...அவர் என் குரு! அதோ அவர் என் பாட்டனார். இவர்கள் எல்லாம் என்னுடன் உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள். இவர்களைக் கொன்று, நான் தீராத பழியையும் பாவத்தையும் சுமக்க வேண்டுமா?... எய்தவன் இருக்க யாராவது அம்பை நோவார்களா?... அழிப்பது நீ! அழிக்கச் செய்பவன் நான் !! உன்னை எப்படி பழியும் பாவமும் சேரும்? செய்பவனைத்தானே பாவமும் புண்ணியமும் சேரும் என்கிறார்கள்? கடமையைச் செய்ய வேண்டியவன் மனிதன். அதற்கான பலனைக் கொடுப்பவன் இறைவன். ஆதலால், கடவுள் இட்ட பணி என்று உன் கடமையைச் செய்... கண்ணா! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. கலங்கிய நீரில்தான் தெளிவைக் காண முடியும். குழப்பம் தெளிவுக்கு அறிகுறி. ஐயம் அறிவுக்கு முன்னோடி. அர்ஜூனா கவனமாகக் கேள்.