பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O4 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மன்னனும் நானே! மக்களும் நானே! இந்த உலகமும் நானே! உயிர்களும் நானே!. அழிந்து போவது உடல்...அழியாது இருப்பது புகழ்! கலைந்து போவது உறவு...கலையாது வாழ்வது அறிவு உலகைக் காப்பது நீதி! உண்மையை அழிப்பது அநீதி! இவையெல்லாம் காலங் காலமாய் நடந்து வருவன. உலகத்தை அழியாமல் காத்து வருவன... 電 அருச்சு: அப்படியென்றால்... கண்ணன்:என்னை நம்பு. எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிடு. ஆண் மையுள்ள உன்னிடம் அழிக்கும் சக்தியைத் தந்திருக்கிறேன். சிந்திக்காமல் செயல் படு. எடு வில்லை! ஏற்று நாணை! ஆகட்டும் கண்ணா! (வில்லை எடுத்து நானேற்றுகிறான்) போகட்டும் என் அம்பு. பாயட்டும் பகைவர் மேல்., ஒழியட்டும் அவர்களின் வெறியாட்டம். கண்ணன்.ஆம் அர்ஜுனா. அழியப் போகிறது அதர்மம். இனித்தான் தரும ஆட்சி நடைபெறப் போகிறது. வாழ்க தர்மம். வளர்க பாரதம்.