பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரி: சுத்தோ: -- மந்தி ր : 1 O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா காட்சி தருவார். ஆனால், நமக்கு இன்னும் பொறுமை வேண்டும் அரசே! கத்தோ: பொறுமை?... அமைச்சரே! இன்னுமா பொறுமை? ஆசை மீறுகின்ற பொழுது... அறிவு தடுமாறும். அதைக் கட்டுப்படுத்தும் பொழுது. - - பாசம் புயலெனக் கிளம்பும் அமைச்சரே! பாசம் புயலெனக் கிளம்பும் என் மார்பைத் தொட்டி லாக்கி, இந்த மடியைக் கட்டிலாக்கி வளர்த்தேன். சித்தார்த்தன் என்ற பெயரிட்டு செல்லமாக அழைத்தேன். ஆசைக்கு ஒரு மகன், இந்த அரசுக்குத் திருமகன், அவனைப் பெற்றவன் நான் - என்ற பேரானந்தத்தில் திளைத்தேன். களித்தேன். ஆனால். ஆனால்... இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காக்க இருந்த மகன், இன்று காட்டிலும், மேட்டிலும் துறவியாகத் திரிகிறான் கூடே இல்லாத குருவியாக அலைகிறான். புரிகிறதா என் நிலைமை. தெரிகிறதா இந்தக் கொடுமை! என் இதயம் கடலாகக் குமுறுவது கேட்கிறதா? உமக்கெங்கே கேட்கப் போகிறது அமைச்சரே!... மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்திகளே! புத்திர பாசம் பொல்லாததுதான். இருந்தாலும், இன்றைய நிலையை நாம் சிறிது யோசித்துப் பார்க்கத்தான் வேண்டும். சித்தார்த்தராக இருந்தவர் புத்தராக மாறி, இந்தப் பூவுல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/11&oldid=775396" இலிருந்து மீள்விக்கப்பட்டது