பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 17 சேனாதி: அரசே! உங்கள் நீங்காத அன்பு தான் வேண்டும். அதுவே போதும். சுத்தோ: நீங்காத அன்புதான் என்னிடம் நிறைய - இருக்கிறதே! ம்...காலம் வரும். நான் கவனித்துக் கொள்வேன். சரி சேனாதிபதி! நீ போகலாம். (சேனாதிபதி வணங்கியபடி போகிறார்) அமைச்சரே! வராத மகன் வருகிறான். நீங்கள் சொன்னது உண்மையாயிற்று... என் நம்பிக்கை வீண் போகவில்லை. எங்கே, இலவு காத்த கிளியாய் ஆகி விடுவேனோ என்று பயந்தே போனேன். மந்திரி; சத்தியம் என்றும் வெல்லும் அரசே! உத்தம குமாரன் உங்களைக் காண கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று நிறைவேறி விட்டது. நல்லவர்கள் ஆசையை இறைவன் நிறைவேற்றாமல் இருப்பதில்லை. கொஞ்சம் பொறுமை வேண்டும். சுத்தோ அமைச்சரே! என் மகனை ஆடம்பரமாக வரவேற்க வேண்டும். ஏற்பாடுகளை இன்றே தொடங்குங்கள். அலங்காரம் பிரமாதமாக இருக்க வேண்டும். பார்த்தவர்கள் எல்லோரும் மயங்க வேண்டும். யாருக்கும், எப்பொழுதும் இதுபோல் அமைய வில்லை என்று இந்த நாடே புகழ வேண்டும்: ஆமாம். இந்த உலகமே புகழ வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/18&oldid=775403" இலிருந்து மீள்விக்கப்பட்டது