பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மந்திரி. கபில வஸ்துவை தேவலோகமாக்கி விடுகிறேன். உங்கள் உத்திரவுக்காகத் தான் காத்திருந்தேன். வருகிறேன் சக்கரவர்த்திகளே, வணக்கம். (மந்திரி போகிறார்) (அரசர் தனியே உலாவிய வண்ணம் பேசுகிறார்) 48 சித்தார்த்தன் வடிப் போகிறான்...(மெதுவாக சிரித்தல்) ம்...வந்தால் எப்படி அழைப்பது... சித்தார்த்தா வா! என் மகனே வா என்றா?... ம்ஹாம். அவன் தெய்வப் பிறப்பு. உலகுக்கு வழிகாட்டி. பின்னே எப்படி அழைப்பது? o புத்த பெருமானே! வாருங்கள்! வாருங்கள் இப்படியா! சே! சே! என் மகனை, என் குமாரனை, நானே பிரானே பெருமானே என்றா அழைப்பது? கடவுளே! இது என்ன புதுக் குழப்பம்? இன்றைய இரவு விடியட்டும். இறைவா! எனக்கு நிம்மதி கிடைக் கட்டும். (போகிறார்) -திரை 3; காட்சி 4 இடம்: அரண்மனை வாயில். உள்ளே சுத்தோதனர், புத்தர், இராகுலன். (சுத் தோதனர் ஆவலுடன் வழி யையே பார்த்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/19&oldid=775404" இலிருந்து மீள்விக்கப்பட்டது