பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சுத்தோ: புத்தர்: சுத்தோ: புத்தர்: சுத் தோ: புத்தர்: பெறக் கூடியது. சேனையோடுசேர்ந்து கொண்டு சண்டை போடும்போது அல்ல. அமைதி உள்ளத்திலே வேண்டும். அனுதாபம் செயலிலே வேண்டும். நல்லது. (சற்று எரிச்சலுடன்) இப்பொழுது உமக்கு என்ன வேண்டும்? (அமைதியாக) எனக்குப் பிச்சை வேண்டும். பிச்சையா ஐயோ! இந்த வார்த்தைகளைக் கேட்க என் காதுகள் என்ன பாவம் செய்தனவோ! எதற்காக எடுக்க வேண்டும் பிச்சை? ஏன் அதிலே உனக்கு இச்சை! அகிலத்தையே கட்டி ஆள்கிறேன் நான். நீ எனக்கு அன்புமகன். நாட்டை ஆள்வதை விட்டு விட்டு ஓட்டை ஏந்திக் கொண்டு அலைகிறாயே! நீதியா! நியாயமா! கடல் மீதே வாழ்ந்தாலும் குடிக்க வேறு தண்ணிர் தான் வேண்டும். துறவிக்குத் தேவை பிச்சை. பிச்சை எடுப்பது எங்கள் தொழில். அது உடலை வளர்க்க அல்ல... உயிரைக் காக்க. இந்த உலகத்தைக் காக்கும் தருமத்தைக் காக்க. (கோபமாக) உனக்குப் பிச்சை இல்லை. என்னிடம் அது இல்லை. வேறு எது கேட்டாலும் தருகிறேன். இதோ! இந்த இராஜ்யம் வேண்டுமா! கேள் தருகிறேன். ஆசையில்லை, அதனால் எனக்குத் தேவையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/21&oldid=775406" இலிருந்து மீள்விக்கப்பட்டது