பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 21 சுத்தோ: புத்தர்: சுத்தோ: புத்தர்: சுத்தோ: தேவையில்லாத துறவிக்கு சேவையும் தேவை யில்லை. எதையோ நினைத்துக் கொண்டு எப்படியோ பேசுகின்றீர்! அரசே! இல்லையென்னாது கொடுத்தது உங்கள் பரம்பரை. வந்தவர்கள் மனம் மகிழ வாரி வாரி வழங்கியது உங்கள் பரம்பரை! நான் இங்கு வந்தது தொல்லை யென்றால், எனக்குப் பிச்சை இல்லை யென்றால், எனக்கு வருத்தமே இல்லை. நாட்டிலே வீட்டுக்கா பஞ்சம்... வருகிறேன் மன்னா! வணக்கம்.

ஐயா துறவியாரே! வாசல் வரை வந்துவிட்டு

வருகிறேன் என்று போவது முறையா? பெரியவரே கோபம் அறிவுக்குப் பகை. தாபம் அன்புக்குச் சத்துரு. கோபமும் தாபமும் பாபத்துக்குத் தூதுவர்கள். உங்கள் அறிவை -- ஆசையும் பாசமும் மறைக்கிறது. பாசமும் பந்தமும் தெய்வீக உறவைத் துண்டித்து விடும். நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள். வருகிறேன். வீண்பழியை இந்த வயோதிகன் மேல் சுமத்தி விட்டுப் போகிறீரா துறவியாரே! (திரும்பிப் பார்த்து) ஏன்? கேவலம் ஒரு அதிதிக்கு அன்னமிடக் கூட இயலாத அரசன் என்ற களங்கத்தை சுமத்தி விட்டுப் போகிறீரா? வேண்டாம். வேண்டவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/22&oldid=775407" இலிருந்து மீள்விக்கப்பட்டது