பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புத்தர்: வேண்டாம்! அந்த ஒட்டை இப்படிக் கொடுங்கள்... (வாங்கிக் கொண்டு உள்ளே போய் திரும்பி வந்து மீண்டும் அந்த ஒட்டைப் புத்தரிடம் தந்துவிட்டு) துறவியே பொன்னையும் பொருளையும் மட்டும் நான் தானமாகத் தரவில்லை. இந்தப் பூவுலகம் வாழ, என் பொன்னான புத்திரனையே கொடுத்திருக்கிறேன். -- தானமாக! எனக்கா நிதானம் இல்லை. இருக்கிறது...இருக்கிறது. அதனால்தான் நான் இப்படி இருக்கிறேன். . (அரசர் உள்ளே போகிறார்) மூப்பும், பிணியும், இறப்பும் மனிதரைக்கொல்லும் பிசாசுகள். அவைகளை மனிதன் தன் முதுகில் சுமந்து கொண்டு, ஆசை என்கிறான், பாசம் என்கிறான், சுகம் என்கிறான், சொர்க்கம் என்கிறான். பாவம் விளக்கைக்கையிலே பிடித்துக் கொண்டு வெள்ளத்திலே போய் விழுகின்ற விவரம் புரியாத மக்கள். இந்த ஏழை உலகம் என்று வருந்துமோ! என்று திருந்துமோ (போகிறார்) 'புத்தம் சரணம் கச்சாமி” என்ற குரல் பின்னணியில் ஒலிக்கிறது. சுத் தோதனர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டே நிற்கிறார். அவரது பேரன் (புத்தரின் மகன்) இராகுலன் அங்கு ஒடிவருகிறான்) தாத்தா தாத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/23&oldid=775408" இலிருந்து மீள்விக்கப்பட்டது