பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 23 சுத்தோ: (மெய்மறந்து நின்றவர் திடுக்கிட்டு) ம், என்ன ராகுலா? இராகு என் அப்பா இங்கு வந்தாரா? தாத்தா! அம்மா சொன்னது உண்மைதான். தாத்தா! அப்பா துறவியாகி விட்டதால், உலகமே அவரைப் புகழ்கிறதாமே! 牟 சுத்தோ: ஆமாம்! இந்த உலகமே உன் தந்தையை, என் மகனை வாழ்த்துகிறது - வணங்குகிறது. இராகு துறவியாகி விட்டால், இந்த உலகமே வாழ்த்தும், வணங்கும், இல்லையா தாத்தா? சுத்தோ: ஆமாம்! ஏன் அப்படிக் கேட்கிறாய்? இராகு: ஒன்றுமில்லை. நானும் துறவியாகி விடலாம் என்று நினைக்கிறேன். எப்படி என் யோசனை? கத்தோ ராகுலா பைத்தியம் போல் உளராதே! உன்னை நம்பித்தானேடா இந்த உயிரையே வைத்திருக் கிறேன். நீயோ? வேண்டாம்! அப்படி நினைக்கவே வேண்டிாம் (அவனை அனைத்து) இங்கே பார் ராகுலா படைதிரட்டுவேன், பாரை மிரட்டுவேன். உலகத்தை ஆள்வேன். திலகமாய் வாழ்வேன். இப்படி இருக்க வேண்டும் உன் பேச்சு. நீயோ ராகுலா! என் உயிரைப் பறிப்பதில் உனக்கென்ன லாபம். சரி, உன் தாயார் யசோதை உனக்காக காத்திருப்பார் போ! - இராகு. சும்மா சொன்னேன் தாத்தா...வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/24&oldid=775409" இலிருந்து மீள்விக்கப்பட்டது