பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சுத்தோ: புத்தர்: சுத்தோ: புத்தர்: சுத்தோ: ஊமை அழுவது போல உள்ளம் குமுறினேன். பதறினேன் உன்னைப் பின்பற்றி உன் தம்பி நந்தன் துறவி யானான். என்னிடம் இருந்த அமைச்சர்கள் அத்தனை பேரும் துறவியானார்கள். இப்பொழுது என் குலக் கொழுந்து, உன் மகன் என் அரசுக்குரிய ஒரே வாரிசு... அவனையும் அழைத்துக் கொள்கிறாயே... வெந்த புண்ணிலே வேலா... சித்தார்த்தா! என் மேல் உனக்கு என்ன கோபம்? ஏன் இப்படி என்னை பழி வாங்குகிறாய்?... (புத்தர் திடுக்கிட்டு) அ-ப்-பா வேண்டாம்... அப்படி என்னை அழைக்க வேண்டாம். கெளதமரே! ஒரே ஒரு வரம் மட்டும் கொடுங்கள். நான் உயிர் பிழைத்துப் போயே விடுகிறேன். - வரமா... வரம் தரும் ஆற்றல் எனக்கில்லையே... உண்டு சித்தார்த்தா உண்டு. ஞான ஒளி பெற்ற உன்னைத் தவிர வேறு யாரால் தரமுடியும்? இந்த ஏழைக்கு ஒரே ஒரு வரம்... சொல்லுங்கள். சித்தார்த்தா...அரசாட்சியையும், <多H!P@ மனைவியையும், ஆசை மகனையும் பிரிந்து, ஆரன்யத்திலே வந்து அவதிப்படுகின்ற உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/30&oldid=775417" இலிருந்து மீள்விக்கப்பட்டது