பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 3O மனநிலை வேறு. பக்தி வேறு. பக்குவம் வேறு. உன்னைப் போல மற்றவர்களையும் மாற்ற, என்னைப் போன்ற பெற்றோர்களைத் தவிக்க விடாதே. புத்த தருமத்தை யுத்த தருமமாக மாற்றாதே. பெற்றவர்களை நிம்மதியாக வாழவிடு. பெற்றோர்களை பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ விடு. வருகிறேன். வா.ராகுலா. (ராகுலனை இழுத்துக் கொண்டு போகிறார். அவன் பிரிய மன மின்றிப் போகிறான். புத்தர் அவர்கள் போன திசையைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார். குழப்பம் அவரது முகத்தில் பரவி பிறகு, தெளிவு பெறுகிறது. உதாயி அவரையே பார்த்துக் கொண்டு நிற்க, அவர் பக்கம் திரும்பி) புத்த உதாயி- நமது சங்கத்திற்கு இன்றிலிருந்து ஒரு புது விதியை அமைப்போம். பெற றோரின் அனுமதியில்லாமல் யாரையும் நம் சங்கத்தில் இனி சேர்க்கக் கூடாது." தெளிந்த நீரில் தான் முகம் பார்க்க முடியும். தெளிந்த அறிவில் தான் தெய்வீக சுகம் பார்க்க مــي முடியும். வாருங்கள் போகலாம். (போகின்றனர்.புத்தம் சரணம் கச்சாமி என்ற ஒலி எழும்புகிறது) -திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/31&oldid=775418" இலிருந்து மீள்விக்கப்பட்டது