பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 35 பாரி: கபிலர்: பாரி: கபிலர்: கூலியா? மன்னவன் ஆணைக்கு மறுவார்த்தை ஏது? * கபிலரே! இதோ பாருங்கள். உங்கள் புலமைக்கு என் நட்புக்கு, நான் தரும் பரிசு... உங்கள் கண்களுக்கு எவ்வளவு தூரம் தெரிகிறது. ம்...அதோ...சிறு வாய்க்கால் ஒன்று. கபிலரே. அது சிறு வாய்க்கால் அல்ல. ஆறு. அந்த ஆறுவரை, அத்தனை நிலங்களும் உங்களுக்குத் தான் ... உங்களுக்கே உரிமையாக்குகிறேன். உங்கள் புலமைக்குப் பரிசாக அளிக்கிறேன். A. மன்னா...' - இதையும் மறுக்காதீர்கள்.வாருங்கள் போகலாம். எல்லோருக்கும் தந்து சுகம் காணும் தயாநிதியே! வாழ்க... உலகைக் காக்க மாரி, உயிர்களைக் காக்கப் பாரி, என்று உலகம் போற்ற வாழ்க... (வாழ்த்துகிறார்) (பாரி புன்னகை செய்கிறார்) -திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/36&oldid=775423" இலிருந்து மீள்விக்கப்பட்டது