பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 37 நாட்டின் மூவேந்தர்களும் இதோ கூடி இருக்கிறோம். இனி, எத்திசையிலிருந்து பகைவர்கள் வந்தாலும் தூள்தூள்தான். பாண்டி உண்மைதான். கையகல நாட்டுக்குத் தலைவன். ஆனால், பொய்யாக வதந்திகளைப் பரப்பி விட்டு மாரி என்கிறான், பாரி என்கிறான். சேரன்: வஞ்சகம் முற்றுகிறது. இதை விட்டு விட்டால், அதுவே நம் வாழ்வுக்கு நஞ்சாகி விடும்...என்ன செய்யலாம்! சோழன் என்ன செய்யலாம் என்பது கோழைகள் செயல். - - திரட்டு படையை, விரட்டு பகையை, வெல்க புகழை இப்படிப் பேசாமல் இருப்பதே நமக்கு அவமானம்... நமக்கும் பலஹீனம். பாண்டி பேச்சு இனிப்பாக இருக்கிறது. சொல் செயலாக வேண்டாமா? நாம் நினைப்பது போல் எல்லாம் நடக்க வேண்டுமே?... சேரன்: ஏன் நடக்காது? கடல் போன்ற படை. புயல் போன்ற நடை-இடி போன்ற முழக்கம். எதிரே எப்படை நிற்கும்? சோழரே! பாண்டியரே! சொல்வதைக் கேளுங்கள். பாரியின் புகழ் பரவியது போதும். அவனை நாம் வெல்ல வேண்டும். கொல்ல வேண்டும். ' - சோழன் ஒன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம். பாண்டி புறப்படுங்கள் தோழர்களே! பதவியும், பணமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/38&oldid=775425" இலிருந்து மீள்விக்கப்பட்டது