பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சோழன்: ஒற்றுமையாகத் திரண்டு வந்து, உங்கள் படைகளை திரட்டி வந்து, பாரியை மிரட்டிக் கொண்டு முற்றுகை இட்டிருக்கிறீர்கள். வெற்றியும் கிடைக்கும் என்று மனப்பால் குடித்து, வாழ்நாட்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? . . . இன்று இல்லையென்றால், வெற்றி நாளைக்கு வருகிறது. கோட்டையைச் சுற்றிக் காவல். ஒரு குருவி காக்கை கூட உள்ளே போகவோ வரவோ முடியாது. உங்கள் மக்களும் மன்னரும், ஒன்று பஞ்சத்தால் சாக வேண்டும்; அல்லது பயந்து எங்களிடம் வந்து சரணாகதி அடைய வேண்டும். கபிலர்: இதைத்தான் மனப்பால் என்றேன். பகற் கனவு என்றேன். ஆசையில் ஓடிவந்து, அவசரத்தால் மதியிழந்து அவதிப்படும் அரசர்களே! எங்கள் வலிமையைக் கேளுங்கள். எங்கள் மலைவளம் நிலையான வளம் உடையது. மூங்கில் மரத்திலும் அரிசி உண்டு. முற்றி வெடிக்கும். பலாப் பழங்கள் கொட்டிக் கிடக்கும் குவியலுண்டு. கொம்புத் தேன் உண்டு. காலமெலாம் பசி போக்க, துயர் நீக்க வள்ளிக் கிழங்குகள் நிறைய உண்டு. தேவையான தினைகளைக் கொண்டு வர, பயிற்சி பெற்ற கிளிகள் எங்களிடம் எத்தனையோ உண்டு. மக்களிடம் வீரம் உண்டு. தீரம் உண்டு. எத்தனை ஆண்டுகள் எதிர்த்தாலும், உங்களை எதிர்க்க எங்களிடம் பலம் உண்டு. நலம் உண்டு. வளம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/45&oldid=775433" இலிருந்து மீள்விக்கப்பட்டது