பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 45 மூவரும்: (கோபமாக, ஆச்சரியமாக) என்ன? கபிலர்: ஆமாம். பாரியிடம் பேராற்றல் மிக்கப் படையுண்டு. உங்களால் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது. - - - - பாண்டி: ம்ஹாம்...வெற்றி பெறவேண்டுமானால்...? கபிலர்: பிச்சையெடுக்க வேண்டும். மூவரும்: (கோபமாக) என்ன? கபிலர்: சீற்றம் வேண்டாம். சிந்தனை தேவை. பகை என்று வந்தால், படை கொண்டு வந்தால், பாழ் படுத்திடுவான் உங்களை. ஆடிப்பாடி வரும் விறலியர். பாணர் போல ஓடி வந்து, கூடி நின்று, பாரிமுன்னே பாடி ஆடிப் பரிசு கேட்டால், அவன் பொன்னையும் கொடுப்பான். பறம்பு மண்ணையம் கொடுப்பான். ஏன்? தன்னையே கொடுப்பான். படையாக இருந்தாலும், கொடையாக இருந்தாலும், வெற்றி பாரிக்குத்தான். இதைக் கூறத்தான் வந்தேன். வேந்தர்களே! ...(கபிலர் போகிறார்...அவர் போனதும்) - = சேரன்: (யோசனையுடன்) பறம்பு மலைக்கு இத்தனை - வளமா? சோழன்: பாரிக்கு இத்தனை பலமா. பாண்டி போர் தொடுத்தால் வெற்றி பெற முடியாதா? சேரன் மன்னர்களே முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும். அவன் சூழ்ச்சியை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/46&oldid=775434" இலிருந்து மீள்விக்கப்பட்டது