பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் . ... " 51 நாட்டு மன்னருடன்... என்னைப் பெற்றவர்! ..(இகழ்ச்சியாக) தந்தையாம் தந்தை! சீ... நினைக்கும் பொழுதோ-விந்தையிலும் விந்தை... - - 1. தளபதி கோபமாகப் பேசுகிறீர்கள். கொந்தளிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது? எதுவும் எனக்குப் புரியவில்லை. இளவரசே கொஞ்சம் விவரமாகக் கூறினால்... . இளவ: கூறுகிறேன். மண்ணாளப் பிறந்தவன் நான்... - விண்ணாளப் போகின்றவர் என் தந்தை. இதற்கிடையிலே அந்தக் கிழவருக்கு எத்தனைப் பொன்னாசை, பொருளாசை, மண்ணாசை... . எத்தனைப் பேராசை... தளபதி: ஆசையிருப்பதில் தவறில்லையே! மணிக்கு - ஓசை எவ்வளவு முக்கியமோ, மனிதனுக்கும் ஆசை அப்படி... இளவ: உபமானம் நன்றாக இருக்கிறது! ஆனால் அது நம் தன்மானத்திற்கு ஒத்துவராது. புரியாதவனே! நடைமுறை தெரியாதவனே! கேள்...கொஞ்சம் சிந்தி.கூர்மையாக செயல்படு. - ஆண்டு கொண்டேயிருக்கும் என் தந்தையின் காலம், நீண்டு கொண்டே போகிறது. வேண்டு மென்றே காலம் கடத்துவதால், மாண்டு கொண்டே போகிறது என் வீரம், விவேகம் எல்லாம். இனி, இளமை நாடாள வேண்டும். முதுமை காடாள வேண்டும். ., *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/52&oldid=775441" இலிருந்து மீள்விக்கப்பட்டது