பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா காட்சி 2 இடம் அரண்மனையில் மற்றொரு அறை. உள்ளே கோப்பெருஞ் சோழன், புலவர், இளவரசன். - (சோழன் சிம் மாசனத்தில் அமர்ந்திருக்க, புலவர் பேசுகிறார்) புலவர்: எதற்கும் தயாராக இருப்பதுதான் தகுதி

    • ,

யுடையவர்க்கு அழகு. உடல் பந்தயக் குதிரைபோல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்தால் தான், உயர்ந்த பல காரியங்களை நம்மால் உறுதியாகச் செய்ய முடியும். உலகில் பிறந்த பயனையும் பெறமுடியும். உடலில் உள்ளம் இருக்கிறது. அந்த உள்ளத்தில்தான் தெய்வம் வசிக்கிறது. தெய்வம் வசிக்கும் திருக்கோயிலாம் நமது உடலை, திவ் விய ஒளிமிக்க வீடு போலப் பாதுகாத்து, திருப்பேறடைய நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையா அரசே? சோழன்: ஆகா! அருமையான கருத்து. திறமையான வாதம். புலவர் பெருமானே! இந்தத் தெய்வீகமான கருத்தைத் தமிழிலே கேட்கும் போது, தமிழ் என்றும் தமிழ்தான்! தமிழராக நாம் பிறந்து, இம்மொழியை நாமணக்க, வாய் மணக்கப் பேசி, பேரின் பத்துடனும், பெருமை யுடனும் வாழ முற்பிறப்பில் நாம் மாபெரும் தவம் தான் செய்திருக்க வேண்டும். யாரங்கே...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/55&oldid=775444" இலிருந்து மீள்விக்கப்பட்டது