பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அரசுரிமை. ஆளும் உரிமை! டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா போல் நடிப்பவருக்கு. சோழன்: அப்படி வாழ்வோருக்கு என்ன கூறினாலும் s ஏறாது. எப்படிச் சொன்னாலும் பழைய நிலை மாறாது. சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாடுதான் அவரின் வழி...சரிதானே? இளவ: வழியை மாற்றி விட்டால்? சோழன்: நாய்வாலை நிமிர்த்த முடியுமா? பால் ஊற்றிக் கழுவினாலும் காக்கையின் நிறம் மாறுமா? அவ்வாறு முயற்சி செய்வது அறிவில்லாதவர்கள் வேலை! - 幕 இளவ: இல்லாதவர்களை உள்ளவர்களாக மாற்றும் சக்தி என்னிடம் நிறைய இருக்கிறது. சோழன் யாருக்கு இல்லை? - இளவ: உங்களுக்கு இந்த நாட்டின் மன்னருக்கு! சோழன்: (கோபமாக) என்ன உளறுகிறாய்? இளவ: உளறவில்லை தந்தையே... உண்மையைக் கூறுகிறேன் எத்தனையோ முறை கேட்டேன். உங்கள் சித்தம் இரங்கவில்லை. இன்று, கடைசியாகக் கேட்கிறேன்.

கேட்பது என்ன?

- அது, நான் இருக்கும் வரை உனக்கு வராது. .*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/57&oldid=775446" இலிருந்து மீள்விக்கப்பட்டது