பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் • 57 நானாகக் கொடுப்பது உரிமை.தானகக் கேட்டுப் பெறுவது மடமை. இளவ: வீணாகப் பிடிவாதம் பிடிப்பது வேந்தருக்கு அழகல்ல. - சோழன் பெறும் காலம் வரை பொறுமையில்லாமல் துடிப்பது, இளவரசனுக்கு அழகல்ல. * இளவ காலம் நீடிக்கிறது. -. சோழன்; அது காலதேவன் கருணையால்...ஏன்? என்னை இறந்து போகச்சொல்கிறாயா? இளவ: அவ்வாறு சொல்ல வில்லையப்பா. இப்பொழுதே எனக்கு முடிசூட்டி வைத்துவிடுங்கள் என்கிறேன். - * , சோழன்; உனக்குப் பக்குவம் போதாது. இளவ: உடல் பக்குவமா? மனப் பக்குவமா? இரண்டுமே என்னிடம் நிறைய இருக்கிறது. வேறு என்ன வேண்டும்? சோழன்; ஆள்கின்ற பக்குவம்...நானாகக் கொடுக்கும் வரை, காத்திருக்கும் மனப்பக்குவம்! - - இளவ: மன்னிக்கவும். தானாகத் தராவிட்டால், நானாகவே எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். - - சோழன்: எப்படி? இளவ: போகப் போகத் தெரியும். (கொஞ்ச தூரம் நடந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/58&oldid=775447" இலிருந்து மீள்விக்கப்பட்டது