பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 3 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பின் திரும்பி வந்து) அப்பா! புலிக்குப் பிறந்தது பூனையாவது இல்லை. பிச்சை எடுப்பதுபோல, அரசு உரிமையைக் கேட்க, நான் ஒன்றும் கோழையும் இல்லை. வீரம் என் குலச் சொத்து..அதன் மூலமே. *

=

சோழன் போர்க்களத்தில் சந்திக்கத் துணிகிறாயா? இளவ: துணிகிறேனா?,துணிந்தே விட்டேன். அப்பா பதவி இல்லையென்றால், பணிவு இல்லை. அப்டா மகன் என்ற கனிவு இல்லை. எந்தக் காலத்துக்கும் நமக்குள் உறவே இல்லை. என்ன சொல்கிறீர்கள்?... - சோழன் உன் முடிவு நல்ல முடிவு. இளவ: அப்படி என்றால்...? சோழன் ஒப்புக் கொள்கிறேன். மக்னே! ஒப்புக் கொள்கிறேன். தப்பிப் பிறந்த மகன் - தாண்டுகிறாய். தணிந்து கிடக்கும் என் போர் வெறியைத் தூண்டுகிறாய். தூங்கிக் கிடக்கும் புலியைத் தீண்டுகிறாய். தவம் செய்து பெற்ற மகன்ே! பாவம் செய்ய என்னைத் துண்டுகிறாய். பரவாயில்லை. உன் விருப்பம் அதுவானால்...நாம் போர்க்களத்திலே சந்திப்போம். * . " நான் ஊட்டி வளர்த்த இதே உடல், உயிருக்கும் மேலாக எண்ணிக் காத்த உடல், கழுகுக்கு இரையாகட்டும்... போ...போய் படையைத் திரட்டு. பலத்தைக் காட்டு. மிரட்டாதே போ. இளவ: வாய் வீச்சிலே வீரம் வேண்டாம். வாள் வீச்சிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/59&oldid=775448" இலிருந்து மீள்விக்கப்பட்டது