பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 59 காட்டுங்கள், வருகிறேன். (வாசல்வரை சென்று மீண்டும் வந்து) தந்தையே! ஒன்றுமட்டும் நினைவில் வையுங்கள். 'இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற்றாலும். உங்களுக்குப் பிறகு இந்த நாடு என் கைக்குத்தான். இந்தப் போரில் நான் வெற்றி பெற்றலும் (சிரித்து). ஆட்சி எனக்கு... அவமானம் உங்களுக்கு அப்பா... எப்படியும் வெற்றி எனக்குத்தான். வருகிறேன். அப்பா (சிரித்தவாறு போகிறான்...அரசன் முகம் கோபத்தால் சிவக்கப் பேசுகிறார்) - - சோழன்: தோல்வியே காண்ாத தோள்கள், துரோகிகளின் தலைகளை மிதித்த என் கால்கள்; குறி தவறாத என் வேல்; குத்திக் கிழிக்கும் இந்த வாள்...ம். வெற்றி யாருக்கொன்று விடிந்தால் தெரிகிறது. முடிந்தால் புரிகிறது. - (கையைத் தட்டுகிறார்...சேவகன் உள்ளே வருகிறார்) உடனே அமைச்சரை அழைத்துவா... (சேவகன் வணங்கியபடி போகிறான் அரசர் நடக்கிறார்... மகன் கூறிய வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.) 'இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற்றாலும். உங்களுக்குப் பிறகு இந்த நாடு என் கைக்குத்தான். நான் வெற்றிபெற்றாலும், ஆட்சி எனக்கு அவமானம் உங்களுக்கு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/60&oldid=775450" இலிருந்து மீள்விக்கப்பட்டது