பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் -* 61 வேண்டும். போங்கள்...போருக்கு ஆகவேண்டி யதை எல்லாம் பொறுப்பாக, சிறப்பாகச் செய்யுங்கள். - - அமைச்சர்:யாருடன் போர் மன்னா? நம் பகைவர்களுக்கு அத்தனைத் துணிவு கிடையாதே! புதிதாக ஏதாவது பகையா? எனக்குத் தெரியாமலா? சோழன்: ஆமாம்... நான் பெற்ற வியாதிதான் இன்று என் உடலை அழிக்கப் புறப்பட்டிருக்கிறது. அமைச்சர்வியாதியா? சோழன். ஆமாம். குழந்தைகளை செல்வம் என்பார்கள். நான் நோய் என்கிறேன். அமைச்சர்.இளவரசருடனா பகை? அவருடனா போர்? சோழன்: ஆமாம். தவறுக்குத் தரவேண்டிய தண்டனை! (புலவர் கோவூர் கிழார் உள்ளே நுழைகிறார்) கோவூர் கிழார்: தண்டனை யாருக்கு மன்னவா? சோழன்: வாருங்கள் கோவூர் கிழாரே! தண்டனை யாருக் கென்று தங்களுக்குத் தெரியாதா?...தவறு செய்பவர்களுக்கு தருமத்தை அழிப்ப வர்களுக்கு தன்னைப் பற்றி அளவுக்குமேல் நினைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் செய்யும் அறிவிலிகளுக்கு! - கோவூர்: நீதி அதுதான் மன்னவா! இருந்தாலும், சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/62&oldid=775452" இலிருந்து மீள்விக்கப்பட்டது