பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சோழன்: - கோவூர்: 64 சோழன். பொருள்தானே? இந்த உலகம் மன்னனால் வாழ்கின்றது! - - அதாவது. - . சோழன்; மன்னன் மக்களுக்குக் காவலன். கோவூர்: ஆம் அரசே மக்கள் உடல் என்றால் மன்னன் உயிர். உயிர் இல்லையென்றால் உடல் இருந்தும் புண்ணியமில்லை. . சோழன்: இதற்கா இப்படி ஒர் பீடிகை? ஆம் மன்னவா! குடிகள் மன்னனை நம்பியே நிம்மதியாக வாழ்கின்றார்கள். அதாவது மன்னனே மக்களுக்குக் கண்கண்ட கடவுள். பழைய கதையைப் பொறுமையாகக் கூறுகின்றீர்கள். - - - ஆம் அரசே பழமைதான் புதுமைக்கு ஆதாரம். இங்கு நடக்கும் புதுமையால், பழமைக்குச் சேதாரம் வந்தால்... செத்து மடிவது மக்கள்; செந்நீர் வடிப்பது மக்கள் சிந்திய மூக்கும் அழுத கண்ணிருமாய் சோர்ந்து துடிப்பது மக்கள். உண்மையைச் சொல்கிறேன் மன்னா! போர் என்பது உங்கள் இருவருக்கும் அல்ல. தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமல்ல! உங்கள் படையிலே உள்ள மக்களுக்கு தமிழ் வீரர்களுக்கு சோழ குலத்தை நம்பி வாழும் மக்களுக்கு! அந்த மாவீரர்கள் உங்களுக்காகப் போராடுகின்றார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/65&oldid=775455" இலிருந்து மீள்விக்கப்பட்டது