பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 65 சோழன்: கோவூர்; உங்கள் கோபம் தணியும்போது, போர் முடியும். ஆனால், அங்கே மக்கள் உடல்கள் சரியும். பெண்கள் வயிறு எரியும். நாடே சுடு காடாகும்! . நீங்கள் சொல்வது (தடுமாறியநிலை - நாளையக் கதை. இன்றிருப்போர் நாளையில்லை. கூட வருவது பாவமும் சோழன்: கோவூர்: - * * சோழன்: புண்ணியமும்தான். பணமும் பதவியும் அல்ல. கேவலம். இந்தச் சிம்மாசனத்திற்குத் தானா சிரம் அறுக்கும் போட்டி....அதுவும் தரணிபோற்றும் தரமுள்ள தந்தைக்கும் மகனுக்கும் இடையில்... கோவூர் கிழாரே... (கோபமாக) o கோபம் வேண்டாம் மன்னா! உங்கள் புகழிலே நீங்களே தீட்டிக் கொள்ளும் கருமை; உங்கள் வரலாற்றிலே நீங்களே எழுதிக்கொள்ளும் வெறுமை; உங்கள் நாட்டிலே நீங்களே ஆழ விதைக்கின்ற வறுமை; உங்கள் மகனையே, நீங்களே அழிக்கின்ற கொடுமை, அப்படி நாடு உழன்றால், உங்கள் மகனை நீங்கள் இழந்தால்... அரசே! இந்த நாட்டுக்கு வாரிசு இல்லை யென்றால்? இந்த நாடு என்னாகும்? சோழர் குலம் என்னாகும்? சோழர் புகழ் என்னாகும்? புரிகிறது புலவரே! எல்லாம் மண்ணாகும். பொன்னான என் நாடு, கண்ணான என் மகன்; கனிவான மக்கள்; என் கோபத்தால், கதையாகிப் போக நான் விடமாட்டேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/66&oldid=775456" இலிருந்து மீள்விக்கப்பட்டது