பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வேண்டாம் இந்த அரசு. வேண்டாம். இந்தப் போர் முரசு. வேண்டாம் இந்த பதவி வெறி. நாடு வேண்டாம்; நலம் வேண்டாம்; பீடு வேண்டாம்; பெருமையும் வேண்டாம். எனக்கு வேண்டுவது வீடு- இறைவன் ്@. அறிவுக்கண்ணைத்திறந்த கவிஞரே.உறவின் பெருமையை, உயிரின் அருமையைக் காட்டிய புலவரே! வாழ்க பல்லாண்டு! (அமைச்சரை நோக்கி) அமைச்சரே படை திரட்ட் அழைத்தேன். பகை விரட்ட நினைத்தேன்... எல்லாவற்றிற்கும் இன்று விடை கொடுக்கப் போகின்றேன். - ஆமாம்...நாடு வெறுத்து, காடு சென்று, என் வாழ்வுக்கு, வீணான அகந்தைக்கு முடிவு கட்டப் போகிறேன். என் ஆசை அழிய, என் ஆவேசம் ஒழிய-- வடக்கிருந்து சாகிறேன். - அமைச்சரே போங்கள்..என் மகனை அழைத்து வாருங்கள். முடி சூட்டு விழாவிற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வாருங்கள் கிழாரே, போகலாம். (போகின்றனர்) அமைச்சர்:சுற்றி அடிக்க இருந்த சூறாவளிக் காற்று, சுமுகமாக ஓய்ந்தது. பற்றியெரிய இருந்த பெருந்தீ. பண்பு நீரால் அணைந்தது. ஆமாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/67&oldid=775458" இலிருந்து மீள்விக்கப்பட்டது