பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (காங்கேயன் தன் குருவின் முன்னே நின்று வணக்கம் செய்கிறான். பரசுராமர் ஆசி கூறுகிறார்.) | - பரசுர τιε, : இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தைக் கட் டிக் காக்கின்ற சக்ரவர்த்தி-சந்தனு மகாராஜாவின் மைந்தன் நீ. எட்டு வயதில் இருந்தே என்னுடைய மாணவனாக இருக்கின்ற உனக்கு, எந்தவிதக் குறைவும் வராது. தைரியமாய் அரண்மனைக்குப் போ! தந்தை உனக்காகக் காத்திருப்பார். காங் : தெய்வத்தின் அவதாரமாகிய தங்களை விட்டுப் பிரிந்துபோக, எனக்கு மனமே இல்லை. குருவே! காலமெல்லாம் உங்கள் கூடவே வாழவேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை. - 零 பரசு வாலிபனே! ஆசையே இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறது. அதற்குள் முற்றுப் புள்ளி வைக்கிறாயே! வைராக்கியம் மிகுந்தவன் நீ என்று, எனக்கு நன்றாகத் தெரியும். எதைச் செய்தாலும் யோசித்தே செய்பவன் நீ! ಹಸಿ: தாயை இழந்த எனக்குத் தாயாகவும், தந்தையைப் பிரிந்த எனக்குத் தந்தையாகவும், குருவாகவும், தெய்வமாகவும் இருந்து வழிகாட்டிய நீங்கள், இனியும் வாழ வழி. காட்டவேண்டும். - * பரசு என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு. கருணை மிகுந்த கங்கையின் மைந்தா! காங்கேயா! கவனமாகக் கேள்! கங்கையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/71&oldid=775465" இலிருந்து மீள்விக்கப்பட்டது