பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - - - 73 சந்தனு: என்ன வேண்டும் உங்களுக்கு? ஏன் என்னை - சித்திரவதை செய்கின்றீர்கள்? கொஞ்ச நேரங்கூட தனியே விடாமல் கொல்கின்றீர்களே? நன்றாய் இருக்கிறதா உங்களுக்கு? முன் செய்த பாபமோ! யார் இட்ட சாபமோ! நான் தினம் தினம் வேதனையில் வெந்து சாகிறேன். வெளியே சொல்லவும் முடியவில்லை. என் மனதை வெல்லவும் முடியவில்லை. ஏன் வந்தீர்கள் இங்கு? அமைச்சர்:கொலுமண்டபத்திற்குக் கூடத் தாங்கள் வரவில்லையே என்ற குறை எங்களுக்கு! அரச காரியங்கள் அத்தனையும், அரை குறையாக நிற்கின்றனவே என்ற அவசரம் எங்களுக்கு! சேனாதி: இந்த நிலையிலே தங்களைக் காணும் பொழுது, என்ன செய்வதென்றே புரியவில்லை! சந்தனு புரியவில்லை என்று தானே புலம்பிக் கொண்டிருக்கின்றேன். தண்ணிரில் மூழ்கிக் கொண்டிருக்கிறவன் தலையைப் பிடித்து, அழுத்திக் கொண்டு, காப்பாற்றுகிறேன் என்று. கதறுவோர் போல் இருக்கிறது உங்கள் வழக்கு. அமைச்சரே! மூளைக்கு வேலை கொடுங்கள். ஏதாவது பட்டால் சொல்லுங்கள். இல்லையேல் என் முகத்தில் விழிக்காது எங்கேயாவது போங்கள். - o, அமைச்ச யோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் - மகாராஜா. ஆனால், இது சிக்கலான பிரச்சனை என்பதால்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/74&oldid=775471" இலிருந்து மீள்விக்கப்பட்டது