பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L-//dž, L-MU o / orСЛ. நவராது Կ0/Վ:Ի (oԱ O0 J (oԱ ԱԱ/ I பயணம் இனிதாக இருந்ததா? காங்: குருதேவர் நலமே. பயணமும் இனிதே. - அப்பா! நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறவில்லையே! - - - - - சந்தனு எனக்கென்ன குறை மகனே! நன்றாகவே இருக்கிறேன் நான். காங்: அமைச்சரே! அப்பா முகத்தைப் பாருங்கள்... அவர் கூறுவது உண்மையா, இல்லை நான் கூறுவது உண்மையா என்று நீங்களே கூறுங்கள்? சந்தனு: காங்கேயா! உனக்கு ஓய்வு தேவை. நீ போ... - பிறகு பேசிக் கொள்ளலாம். - காங்: மன்னிக்க வேண்டும் தந்தையே... என்ன காரணம் என்று...? சந்தனு: தலைக்கு மேல் வளர்ந்து விட்டாய். கலைகள் வேறு கற்றுக் கொண்டிருக்கிறாய். அதனால் தான் வந்ததுமே வாதம் செய்கிறாய். உன்னிடம் நான் வீண் அதிகாரம் செய்ய விரும்பவில்லை. உன் விருப்பம் போல நடந்து கொள்ள உனக்கு உரிமை உண்டு. நீ இங்கே இரு... நான் வருகிறேன். (மன்னர் போகிறார். பின்னால் * - அப்பாஅப்பாஎன்று அழைத்தவாறு காங்கேயன் போகிறான்) அமைச்சர்: இளவரசே! இளவரசே!... - o –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/77&oldid=775477" இலிருந்து மீள்விக்கப்பட்டது