பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 79 வயதிலே தாயை இழந்தவன். இத்தனை ஆண்டுகளாக இந்த நாட்டை விட்டு அகன்று, காட்டிலே வாழ்ந்தவன். என் பெயர் காங்யேன். செம்ப புரியவில்லை...மன்னிக்கவும். (குழப்பத்துடன்) காங்: யாரென்று புரிய வைக்கிறேன். முதலில் என் தந்தை இங்கே வந்தார். அவர் விருப்பம் நிறை வேறவில்லை! இன்று அவரது மகன் வந்திருக்கிறேன். என் விருப்பமாவது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையால், இப்போது புரிந்திருக்குமே!... செம்ப: இல்லையே (யோசனையுடன்) - * காங் உங்கள் நினைவாற்றல் இவ்வளவு விரைவில் மாறிப்போகும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த நாட்டை ஆளும் சக்கரவர்த்தி, இந்த இடத்திற்கு வந்து போனதை, வந்து நொந்து போனதை, இவ்வளவு சீக்கிரம் மறந்திருப்பீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்பொழுது புரிந்திருக்குமே! செம்ப: ஆமாம்...அவருக்கு. காங்: ஆமாம்...அவருக்கு. ஒரே ஒரு மைந்தன். அரசுக்கும் ஒரே ஒரு வாரிசு.எனக்கு முன் பிறந்தவர்கள் எல்லாம், இந்தக் கங்கையிலே வீசி எறியப்பட்டார்கள். ஆகவே, நான்தான் வாரிசு. என்பெயர் காங்கேயன். செம்ப வணக்கம் இளவரசே. இப்படி அமருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/80&oldid=775485" இலிருந்து மீள்விக்கப்பட்டது