பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 81 எவ்வளவு ஆசையும் பாசமும் வைத்திருக்கிறாரோ, அந்த அளவு ஆசையும் பாசமும் நான், என் மகள் மேல் வைத்திருக்கிறேன். காங்: எனக்கு நன்றாகப் புரிகிறது. செம்ப: உங்கள் எதிர் காலத்தை, உங்கள் தந்தை விரும்புவது போல, என் மகளுடைய நல் வாழ்க்கையை நானும் விரும்புகின்றேன். காங்: உண்மைதான். உலகத்திற்கு நீதி ஒன்றுதான். செம்ப; பிறருடைய இன் பத்திற்காக, என்னுடைய மனக்கோட்டை இடிந்து போக, நான் விரும்ப வில்லை. பிறருடைய மனதைப் புண்படுத்த வேண்டும் என்பது, என் ஆசையுமில்லை. - காங்: உங்கள் உள்ளம் சரிதான். செம்ப: அவ்வளவுதான். இனிமேல் நான் எதுவும் கூறப் போவதில்லை. காங்: ஐயா பெரியவரே! பாதியிலே நிறுத்தி விட்டீரே! மீதியைக் கூறினால்தானே உங்கள் உள்ளம் புரியும்... செம்ப உள்ளம் புரிந்தாலும், உலகம் தெரிந்தாலும், உங்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை! காங்: இளைஞன்தானே, என்று ஏளனமாக எண்ணி விட்டீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/82&oldid=775489" இலிருந்து மீள்விக்கப்பட்டது