பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 83 அந்த வைராக்யம் எனக்கும் உண்டு. நீங்கள் கூறிய எல்லா சேதியும் எனக்கு முன்னமே தெரியும். செம்ப: தெரிந்து கொண்டா கேட்டீர்கள்? காங்: ஆமாம்... என் தந்தையின் முகத்தைப் பார்த்தேன். எங்கள் அமைச்சரின் வார்த்தைகளைக் கேட்டேன். தீர விசாரிக்க வேண்டாமா?. அது தானே முறை. இல்லையா தாத்தா?. தாத்தா. இப்படி அழைக்கும் உரிமை எனக்கு உண்டு என்று நினைக்கிறேன். செம்ப உரிமை, உறவு என்று பேசுவதினாலே என் உள்ளம் மயங்கி விடாது. எனக்கு வேண்டியது ஆளும் உரிமை. நீ அழைக்கும் உரிமையல்ல. செம்ப வெறும் பேச்சு நேரத்தை வீணாக்கும். காங்: ஆமாம். இனி வீணாகப் பேச வேண்டாம். இதோ! ஆளும் உரிமையை உங்கள் வருங்காலப் பேரனுக்கு அளிக்கிறேன். இந்த மண்ணும், விண்ணும், என் மாதா கங்கையும் அறியச் சத்தியம். என் உரிமையை, என் இளைய சகோதரனுக்கு அளிக்கிறேன். செம்ப: நீங்கள் அளிக்கலாம்... காங்: சந்தேகம் வேண்டாம். தாராளமாகக் கூறலாம். செம்ப. நீங்களும் அளிக்கலாம். உங்கள் தந்தையும் சம்மதிக்கலாம். ஆனால், உங்கள் மகன் இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/84&oldid=775494" இலிருந்து மீள்விக்கப்பட்டது