பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா காங்: செம்ப: காங்: பட்டத்திற்குப் போட்டி போடலாம் அல்லவா! அப்பொழுது, உங்கள் வாக்குறுதி பொய்த்துப் போகுமே? ஆமாம்...மறந்தே போனேன். என் வாக்குறுதி பொய்க்கக் கூடாது. என்னுடைய வாரிசு, வழக்காட வந்து விடக் கூடாது. இந்தப் பட்டத்திற்குப் போட்டியே வரக்கூடாது. அதற்கு ஒரே வழி...எனக்கு சந்ததியே வரக்கூடாது. - தாத்தா... சத்தியமாகக் கூறுகிறேன். இனி, நான் எந்தப் பெண்ணையும் மனதாலும் நினைக்க மாட்டேன்; கரத்தாலும் தீண்ட மாட்டேன். ' என் தந்தையின் துன்பம் தீர வேண்டும். இன்பம் காண வேண்டும். இதுதான் என் லட்சியம். நிறை வேறுவது நிச்சயம். ...[5 ل945IT6Aئے இந்த இலட்சியத்திற்காக, திருமணமே செய்து கொள்ள மாட்டேன். இந்த வைராக்கியம் என் வாழ்நாள் முழுதும் நீடிக்கும். உங்கள் வளமான பரம்பரையை வாழ் விக்கும். கடைசிவரை, உங்கள் இனத்தை, நமது குலத்தை இந்தக் கரங்கள் காக்கும். நிச்சயமாக, சத்தியமாக. (செம்படவன் கைகளிலே சத்தியம் செய்கிறான்.) (அசரீர் ஒலிக்கிறது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/85&oldid=775497" இலிருந்து மீள்விக்கப்பட்டது