பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 89 முனிவர்: தேவை எனக்கல்ல் மன்னா... பாண்டவருக்கு. சகுனி தேவைப்படுவது பாண்டவருக்கா...என்ன சொல்கிறீர்கள்! நீங்கள்!... முனிவர்: சகுனி அவர்களே... நான் இப்போது இங்கே துறவியாக விரவில்லை. ஒரு தூதுவராக வந்திருக்கிறேன். பஞ்ச பாண்டவர்களின் பிரதிநிதியாக... கர்ணன்: (கேலியாக) தங்கள் கோலமே பஞ்சை...பஞ்சை பாண்டவர்களுக்குத் தூதுவராமல், பின் பலசாலிக்கா வரமுடியும்? வேடிக்கையாக இருக்கிறது! விலாப் புடைக்கச் சிரிக்க வேண்டும் போல் தோன்றுகிறது எனக்கு!... முனிவர்: கர்ணா.சி.ரி.சிரிப்பையும் சிந்தனையையும் அடக்கவே கூடாது. என் கோலம் இப்படி இருக்கலாம். பாண்டவர்களின் காலமும் பஞ்சையாக இருக்கலாம். ஆனால் கொள்கை அப்படி அல்ல. காலமும் ஒரு நாள் மாறலாம் கர்ணா, பாண்டவர்களின் துன்பமும் நாளைக்கே தீரலாம். துரியோ; வீண் கற்பனை முனிவரே! வெறும் நப்பாசை. கதையைக் கேளுங்கள், நான் கூறுகிறேன். அவர்கள் வாதுக்கு வந்தார்கள். தோற்றார்கள். சூதுக்கு வந்தார்கள்...தோற்றார்கள்; இன்று தூதுக்கு... (ஏளனமாகச் சிரித்துவிட்டு) வழக்கம் போல் தோல்விதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/90&oldid=775508" இலிருந்து மீள்விக்கப்பட்டது