பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முனிவர்: துரியோ: (ԱՐ னிவர் : சகுனி: முனிவர்: கர்ணன்: மன்னா! தோல் விதான் வெற்றியின் படிகள்...மனசாட்சிக்குப் பயந்து, மன்னவராக இருந்து, முடிவு செய்யவேண்டும் மன்னா... இனி நான் சொல்ல வந்ததைச் சொல்லட்டுமா?... நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள். நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன். 12 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து, ஒராண் Q) Ա) భ్ . . . ; تم سہو ؟ ! - - + உருவம் தெரியாது மறைந்து வாழ்ந்த L-J FT 6ÖTŐI – 6) i fi ċ5 6f . உங்கள் சகோதரர்கள், தங்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கேட்கச். சொன்னார்கள். கேட்டார்களா பாண்டவர்கள்?....(சிரிப்புடன்) அந்த ஆண்டவனே வந்து கேட்டாலும் முடியாதே. ஆண்டிபோல அலைந்து திரிந்த வர்களுக்கு, அரசாட்சி வேண்டுமாம், அரண்மனை வேண்டுமாம், ஆடம்பர வாழ்வு வேண்டுமாம். ஆசையைப் பாருங்கள்!... எங்கேயாவது போகச் சொல்லுங்கள் வேலை செய்து பிழைக்க! வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். வனவாசத்திற்குப் பிறகு, அவர்களுக்கு நீங்கள் தருவதாகச் சொன்ன நாடு. நாடா? ஏது நாடு?...கடலில் கலந்து விட்ட பிறகு ஆறாவது நீராவது!... நாட்டை அடகு வைத்துத் தோற்று விட்டு, நாடு கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போடும் நப்பாசை எதற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/91&oldid=775509" இலிருந்து மீள்விக்கப்பட்டது