பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 91 நாணய மில்லாதவர்கள், நடத்தை கெட்டவர்கள்! முனிவர்: இப்படிச் சொல்வது நல்லது இல்லை. உங்கள் தகுதிக்கும் ஏற்றதில்லை. இது தருமமும் இல்லை. பெருமையும் இல்லை. துரியோ; இனிமேல் எனக்குப் பொறுமையும் இல்லை. தூதுவர் என்பதால் சாதுவாக இருக்கிறேன். என்ன மாமா?...இல்லையா கர்ணா?... இல்லையேல், தோள் துடிக்கும்...வாள் ஒலிக்கும், பேசியவரின் உடல் தூள் பறக்கும். ஆமாம் முனிவரே! நீங்கள் வந்தவேளை நல்லவேளை. பொறுமையாகக் கூறுகிறேன்.... போய்வாருங்கள்! முனிவர்: துரியோதனா...இதுதான் உன் முடிவா?... துரியோ ஆமாம். வாய்முனையில் நாடில்லை. வேண்டு மானால் போர்முனையில் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்...நீங்கள் போகலாம். சபை கலையட்டும். (போகிறான், முனிவர் திகைத்து நிற்கிறார்) -திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/92&oldid=775511" இலிருந்து மீள்விக்கப்பட்டது