பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா காட்சி 2 இடம்: நாட்டுக்கு வெளியே... உள்ளே தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி, கண்ணன். அருச்சு: தூது சென்ற முனிவரைத் தூக்கியெறிந்து பேசியிருக்கிறான் துரியோதனன்...என்ன அகம் பாவம் இருந்தால் இப்படிப் பேசியிருப்பான்? - பீமன்: வாய் கொழுத்த வீணனை, நாயைப் போலக் கிழித்தெறிய வேண்டும். பேயாட்டம் போடுகிறானா பித்தன்?...பார்க்கிறேன் ஒருகை. தருமன்: அமைதி தம்பிகளே...அமைதி! ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு. ஆண்டுகள் பதின்மூன்றை அனுபவித்து விட்டோமே... ஆராய்வதற் குள்ளாகவா இத்தனை ஆத்திரம்....இந்த நேரத்தில் இங்குக் கண்ணன் வந்தால் எப்படி இருக்கும்?... பாஞ்சாலி. அதோ அண்ணன் வந்து விட்டார்.ஆயுசு நூறுதான். தருமன்: (எல்லோரும் வணங்குகின்றனர்) வாகண்ணா வா! நினைத்தேன், வந்து விட்டாய்! கண்ணன்:ம் ஹாம். நான் வரும்போது தான் நினைத்திருக்கிறாய்....ஆமாம்...ஏதோ நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இடையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/93&oldid=775513" இலிருந்து மீள்விக்கப்பட்டது