பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர் எஸ். தவராஜ் செல்லையா J、T、 கண்ணன்: பீமன்: கண்ணன்: ஆம் மகாதேவா! நீதி இல்லாத இடத்தில் நியாயம் இல்லைதான். சாக் கடையிலே சந்தன வாடையை எதிர் பார்ப்பது போல, அற்பர்கள் இடத்திலே அறிவுடைமையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? வீரமும் விவேகமும் எங்களிடம் நிறைய இருக்கிறது. இருந்தும்... வீரமும் வெற்றியும் ஒன்றாகப் பிறந்தவைகள். இருந்தாலும், அவை ஒன்று சேரக் காலமும் நேரமும் வேண்டாமா? நான் சேர வைக்கிறேன். உத்திரவு தாருங்கள். வீரம் பேசும் வாயைப் பிளந்து, மண்ண்ோடு மண்ணாக மக்கிப் போகும் அளவு நான் மாற்றி வைக்கிறேன். எங்கள் வாழ்க்கைத் தீபத்தை ஏற்றி வைக்கிறேன். ஆத்திரப்படுவதால் பயனில்லை. தருமன்: அமைதியாகவே இருப்போம். காலதேவன் கண் பாஞ்சாலி: அருச்சு: விழிப்பான். காரியம் கைகூடும். எதுவரையில் காத்திருப்பது? என் நிலையைப் பாருங்கள், அண்ணா! எனக்கு ஒரு வழி கூறுங்கள்! அவிழ்ந்து கிடக்கும் என் கூந்தலை அள்ளி முடிப்பது எப்போது? அன்று இட்ட சபதம் நிறைவேறுவது எப்போது? துகில் உரிந்த துரியோதன் திமிர் அழிவது எப்போது? வில்லெடுத்து நாணேற்றி வீரமுடன் பாணம் விட்டால், வீழாதா பகைவர் தலை? அழியாதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/95&oldid=775518" இலிருந்து மீள்விக்கப்பட்டது