பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் பயிற்சி

உடற்பயிற்சி செய்வதால்
உடலில் உறுதி வந்திடுப
உடலும் உறுதி ஆவதால்
ஓங்கி திறமை வளர்ந்திடும் !

நோயில்லாமல் நாமெல்லாம்
நூறு வயது வாழலாம்
ஆய கலைகள் அனைத்தையும்
அறிந்து இன்பம் அடையலாம் !

ஊசியில்லா மருந்து தான்
உண்மை இன்ப விருந்துதான்
ஓசை இன்றி உதவிடும்
உடற் பயிற்சி நண்பன்தான் !

உலகம் முழுதும் செய்கிறார்
உடலில் அழகைப் பெறுகிறார்
திலகம் போல வாழவே
தினமும் பயிற்சி செய்குவோம் !

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/15&oldid=1341963" இலிருந்து மீள்விக்கப்பட்டது