இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கூடி ஆடுவோம்
கூட்டமாக ஒன்றுசேர்ந்து
கூடி ஆடுவோம் -அழிகுத்
தோட்டத்திலே பூக்கள் என்று
சேர்ந்து ஆடுவோம் !
ஒற்றுமையே வலிமை என்று
உரக்கப் பாடுவோம் - பெரும்
வெற்றி என்று வேற்றுமையை
விரட்டிப் போடுவோம்!
போட்டியுள்ள ஆட்டத்திலே
பொறுமை காட்டுவோம் - வெறும்
போட்டிதரும் பொறாமையை
பொசுக்கி ஒட்டுவோம் !
வெற்றிக்காக விதிகளேயே
மீறவே மாட்டோம் - இதை
முற்றும் நாங்கள் புரிந்துகொண்டோம்
மாறவே மாட்டோம் !
15