பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூரியன்



காலையில் சூரியன் கண்விழிப்பான் கடமைகள் செய்திட முன்நடப்பான் வேலையை மனிதர்கள் செய்திடவே விரும்பியே தினந்தினம் துணையிருப்பான்!

சேவல் கூவியே சிறகடிக்கும்
சேர்ந்தே குயிலும் குரல்கொடுக்கும
ஆவலில் மலர்கள் இதழ்விரிக்கும்
அழகாய் சிரித்தே தேன்இறைக்கும் !

வெளிச்சம் உலகில் பரவிவரும்
வேலைகள் வீட்டில் தொடங்கிவிடும் பளிச்சென பகலும் வந்துவிடும்
பற்பல நன்மைகள் தந்துவிடும் !

சூரியன் உதிப்பது அதிகாலை
சூட்டை கொடுப்பது பகல்வேளை
சுகத்தைக் கொடுக்கும் மாலையிலே
சென்றே மகிழ்வோம் சோலையிலே !

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/21&oldid=1341969" இலிருந்து மீள்விக்கப்பட்டது