பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தண்ணீர்

நீரே நீரே தண்ணீரே
நெருப்பில் காய்ந்தால் வென்னீரே!

கலந்தால் பாலில் பாலாவாய்
கனிந்தால் பழத்தில் சாறாவாய்!
மலரில் புகுந்தே தேனாவாய்!
வாழ்வில் என்றும் துணையாவாய் !

சிப்பியில் விழுந்தால் முத்தாவாய்
சேற்றில் பயிரில் சத்தாவாய்
அப்புறம மேகம் போலாவாய்
ஆடி அலைந்தே மழையாவாய்!

நீரால் தாகம் போக்கிடுவோம்
நிதமும் சாதம் ஆக்கிடுவோம்!
யாரால் வந்தது தண்ணீரே?
இறைவன் சிந்திய பன்னீரே!

21

,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/23&oldid=1341971" இலிருந்து மீள்விக்கப்பட்டது