பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நல்ல பிள்ளையார்

ஆச்சரியத்தால் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள். "இவைகளெல்லாம் எங்கே கிடைத்தன?" என்று கேட்டாள்.

"நான்தான் சொன்னேனே! பிள்ளையார் என்னை ஓரிடத்துக்கு அழைத்துக் கொண்டுபோனார். அங்கே இவைகள் எல்லாம் இருந்தன. நான் எடுத்துக் கொண்டு வந்தேன்" என்றாள் கமலா.

தன் அப்பா வீட்டுக்குப் போகாமல் தங்கள் வீட்டுக்கு வந்தாளே என்று மாமியார் மகிழ்ச்சி அடைந்தாள்.

'உன் பிள்ளையார் நல்ல பிள்ளையார். அவர் அருமை தெரியாமல் நான் கோபித்துக் கொண்டேன். இனிமேல் உன் மனம்போல அந்தப் பிள்ளையாருக்கு என்ன வேண்டுமானாலும் செய்' என்று மாமியார் கூறி அவளுக்குச் சிற்றுண்டி கொடுத்தாள்.

அதுமுதல் அந்தப் பிள்ளையார் அந்த வீட்டிலும் கமலாவின் அலங்காரங்களைப் பெற்று எழுந்தருளியிருந்தார்.

(ஒரு நாடோடிக் கதையைத் தழுவியது.)