பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நல்ல பிள்ளையார்


நின்றபடியே தன் காதை மாத்திரம் ஆட்டும சக்தி உடையது. பசுவும் அப்படியே செய்யும். இந்த மாதிரி ஆட்டும் வித்தையில் அவன் வல்லவனாக இருந்தான். பசுவைப்போலவே, இரண்டு கைகளையும் கீழே ஊன்றிக்கொண்டு காதுகளை மட்டும் ஆட்டினான்.

பசுவைப் போலவே அவன் நடித்துக் காட்டிய தோடு, அங்கே இருப்பவர்கள் தன்னே எப்படி வேண்டுமானாலும் பரீட்சை செய்து பார்க்கலா மென்றும் சொன்னன். அரசன் தன் மந்திரிகளே அவ்வாறு பரீட்சை செய்யச் சொன்னான். அவர்கள் தங்கள் தங்களுக்குத் தெரிந்தபடி பரீட்சை செய்து பார்த்து, "இவன் மிகவும் சாமர்த்தியசாலியே" என்று சொல்லி வியந்தார்கள். ஒவ்வொரு வித்தைக்கும் ஒவ்வொரு பரிசை அரசன் அந்த வித்தையாடிக்குத் தந்தான். அவன் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டான்.

கோகர்ண வித்தை செய்து காட்டியபோது அங்கே கூடியிருந்த ஜனங்களுக்குள் இடையன் ஒருவன் இருந்தான். அவன் வித்தையாடிக்குப் பக்கத்தில் வந்தான். ஒரு சிறு கல்லை எடுத்து வித்தையாடியின் மேல் போட்டு அவனைக் கவனித் தான்; உடனே அவ்விடையன் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று. மிகவும் சந்தோஷத்துடன் தன் மேலே போட்டிருந்த பழைய கம்பளி ஒன்றை வித்தையாடியின்மேல் எறிந்துவிட்டுச் சென்றான்.