பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4 நல்ல பிள்ளையார்

கண்டு பயம். நாய்க்குக் காளையின் கொம்பைக் கண்டு பயம்.

அந்தக் காளேக்கன்று நினைத்திருந்தால் புதிய நாயை விரட்டியிருக்கலாம். அதற்கு என்னவோ அப்படிச் செய்யத் தோன்றவில்லே அது இரண்டு நாய்களும் போரிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது, அந்தச் சுவாரசியத்தில் இலகளைத் தின்னக்கூட மறந்து விட்டது. இன்னும் நாய்கள் இரண்டும்போராடிக்கொண்டிருந்தன.

அந்தச் சமயத்தில் ஒரு பெரிய எருமை வந்தது அங்கே கிடந்த எச்சில் இலைகளைக் கண்டவுடன் அதற்கு ஒரே மகிழ்ச்சி அவற்றை எச்சிலுணவோடு உற்சாகத்துடன் தின்னத் தொடங்கியது. காளைக் கன்று பக்கத்தில் வந்தது. எருமை அதை முட்டப் போயிற்று. அது பயந்து விலகிவிட்டது. நாய்கள் அருகில் போரிடுவதைக் கண்டு அவற்றையும் முட்டப் போயிற்று. அவை ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஓடிப் போயின. எருமை மாடு குசாலாக உணவுப்பண்டங்களையும் இலையையும் சுவைத்துக் கொண்டிருந்தது.

காளேக்கன்று அதைப் பார்த்தது. அதன் நாவில் நீர் ஊறியது. நாம் புதிதாக வந்த நாயை விரட்டி ஒட்டியிருந்தால்...... ' என்று அது எண்ணியது. இப்போது எண்ணி என்ன பயன்? பாவம் கடைசியில் அதற்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டது.