பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நல்ல பிள்ளையார்

அங்கே சாப்பாடு போடுவார்கள். நல்ல இனிப் பான பட்சணங்களைப் போடுவார்கள். அவற்றை நீங்கள் தின்னுமல் எனக்குக் கொண்டு வந்து தாருங்கள். எனக்கு யார் பட்சணம் பண்ணித் தருவார்கள்! நீங்கள் கொண்டு வந்தால் அவற்றைத் தின்று நான் மகிழ்ச்சி அடைவேன்' என்று சொன்னுள். .

"அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி அவர் கள் கல்யாணத்துக்குப் போனுர்கள். .

தல்யாணம் ஆன பிறகு எல்லாருக்கும் விருந்து போட்டார்கள். பணக்காரர் வீடு. ஆகையால் விருந்து மிகவும் சிறப்பாக இருந்தது. அப்பளம், குஞ்சாலாடு, மாம்பழம், வாழைப்பழம் எல்லாம் போட்டார்கள். - .

சூரியன் முதலிய நான்கு பேரும் சேர்ந்தார் போல் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பட்சணம் போடும்போது சூரியன் அவற்றைக் கையில் வாங்கிக் கொள்ளவில்லை. மற்ற மூன்று பேரும் அம்மாவுக்குக் கொண்டு போய்த் தந்தால் போதும், நானும் கொண்டு போவானேன்? நாலு பேர் பட்சணங்களேயும் அவள் தின்னப் போகிருளா?” என்று எண்ணித் தன் இலையில் போட்ட பட்சணங் களே ருசித்துத் தின்ருன்.

அவனுக்கு அடுத்தபடி வாயு உட்கார்ந்திருந் தான், அவன் வடையை மாத்திரம் இலையில்